Home இலங்கைதனுஷ்கவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தனுஷ்கவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

by admin

 

இலங்கை கிரிக்கெட் வீரர்  தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்  சபையின்  சிரேஸ்  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா். கடந்த வருடம்  அவுஸ்திரேலியாவில்   நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியின் போது பெண் ஒருவரை பாலியல்  துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக தனுஷ்காவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை  இந்த தடையை விதித்திருந்தது,

அதேவேளை  அண்மையில் அவுஸ்திரேலிய நீதிமன்றம்   அந்த குற்றச்சாட்டில் இருந்து  தனுஷ்க குணதிலக்கவை   விடுவித்திருந்தது.  தனுஷ்கவின் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் சபை  நியமித்த மூவரடங்கிய குழு குற்றச்சாட்டில் இருந்து தனுஷ்கவை விடுவிக்குமாறு சிபாரிசு செய்திருந்த நிலையில், அவர் மீதான  தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More