413
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளை சந்தேகநபர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்க வரும் மாணவர்களை இலக்கு வைத்து , ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மாணவர்களை வழிமறித்து மிரட்டி அவர்களிடம் பணத்தை வன்முறை கும்பலை சேர்ந்த சில இளைஞர்கள் கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இது குறித்து யாழ்,மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் , மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கொக்குவில் , நல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , இவர்களுடன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் சில இளைஞர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
Spread the love