1.8K
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் மார்கழி மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
“யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் சகல பாகங்களில் இருந்து மாத்திரம் அல்ல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை போட்டி ஏற்பாட்டாளர்கள் நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சதுரங்க போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில் சகல வயது பிரிவிலும், இருபாலரும் கலந்து பரிசில்கள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டி சர்வதேச போட்டியாக அமைவுள்ளதால், எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்களின் சர்வதேச தரத்தை கூட்டுவதற்கு இது, மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் சர்வதேச போட்டிக்கான எமது இத்தனை வருட கனவை நேர்த்தியான முறையில் பூர்த்தி செய்ய அனைத்து தரப்பின் ஆதரவையும் கோரி நிற்கிறோம்.
போட்டி தொடர்பிலான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் +94757466484 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் , https://www.facebook.com/ profile.php?id= 100079627133737&mibextid= LQQJ4d எனும் தமது முகநூல் பக்கத்தின் ஊடாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தனர்
Spread the love