351
தொழில் தகமையை பெற்றுக்கொண்டால் மத்திரமே இலகுவில் தொழில் வாய்ப்பை பொற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கிராம அபாவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனை பொருளியல், ஆடை வடிவமைப்புக்கான கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு விடயம் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் இடையிலேயே பாடசாலை கல்வியை நிறுத்திக் கொள்வது.
அண்மையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், பிரதம செயலாளரும் என்னிடம் கூறிய விடயம் வடக்கு மாகாணத்தில் 780 மாணவர்கள் பாடசாலையில் இருந்து தங்களுடைய கல்வியை இடைநிறுத்தி இருக்கின்றார்கள் என்று, அந்த அறிக்கையை மீளமைத்து என்னிடம், நேற்றைய தினம் புதன்கிழமை, 611 மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தி இருக்கின்றார்கள் எனவும் ஏனைய மாணவர்கள் பாடசாலைக்கு மீண்டும் சென்றிருக்கின்றார்கள் என கூறினார்கள்.
இதேபோன்று கா.பொ.த சாதாரண தர பரீட்சை, கா.பொ.த உயர்தர பரீட்சை ஆகியவற்றில், சித்தி அடையாத மாணவர்கள், பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதவர்கள் என பலர் வருடாந்தம் வேலை வாய்ப்பற்ற இளைஞர் தொகைக்குள்ளே சேர்த்துக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கு மாகாணத்தில், தங்களுடைய பிள்ளைகள் பொறியியலாளராக அல்லது வைத்தியராக வரவேண்டும் என பெற்றோர் கனவு காண்கிறார்கள், அந்தக் கனவு தவறு என்றோ, குறை கூறவோவில்லை. ஆனால் அதை எட்ட முடியாதவர்கள் அடுத்த கட்டமாக தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான தொழில் தகைமையை பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகளை நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும்.
அதற்காகத்தான் அரசாங்கம் தற்போது பல்வேறு வகைகளிலே தொழில்நுட்ப கல்விகளின் ஊடாக, கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக NVQ என்கின்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றது, தொழில் தகமை என்பதற்கும் கல்வித் தகமை என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.
நாங்கள் பல்கலைக்கழகங்களிலே பெற்றுக் கொள்ளுகின்ற பட்டங்கள் அனைத்தும் எங்களுக்கு தொழில் தகமையை தருவதில்லை, அவற்றில் பெரும்பாலானவை கல்வித் தகமை மட்டும் தான் எங்களுக்கு தருகின்றது. அந்தத் தகமைகளோடு தொழில் தலைமை தேடுவது என்பது முயல் கொம்பான ஒரு விடயம்.
எனவே தொழில் தகமையுடனான கல்வி தகமையை பெற்றுக்கொண்டு, தொழில் முனைவோர்களாக மட்டுமல்ல தொழில் வழங்குவர்களாகவும் மாற வேண்டும் என தெரிவித்து இன்றைய தினம் சான்றிதழ்களை பெற்றவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
Spread the love