277
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு சட்டரீதியாக அந்த பதவிகளை வகிக்க முடியாது எனவும், அவர்கள் அப்பதவிகளை வகிப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
Spread the love