423
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவ பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Spread the love