366
யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை (30.12.23) பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு 11.30 மணியளவில் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் சென்ற இனம் தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதுடன் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love