298
மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொடிகாமம், வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள், அதன் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதனித்து , அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட போதே, மாட்டின் இறைச்சி கழிவுகள் காணப்பட்டுள்ளன.
ஆலயத்திற்கு அருகில் மாடொன்றினை இறைச்சியாக்கிய சம்பவம் ஆலய பக்தர்கள் இடையில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love