328
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் தலைமையக காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
அநுராதபுரத்தை சேர்நத 22 வயதுடைய ஷனுக கிஹான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுக்கு சிறைச்சாலையில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள இளைஞனுடன் மேலும் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love