முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த போது நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 09 மணியளவில் ஆரம்பமான வாக்குமூலம் பெறும் நடவடிக்கை 9 மணித்தியாலங்களை கடந்த நிலையில், அவரை கைது செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02.02.24) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.