Home இலங்கைஐக்கிய மக்கள் சக்தியில் யுத்த வீரர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியில் யுத்த வீரர்கள்!

ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி, சஜித் பிரேமதாசவுடன் இணைந்தார்!

by admin

இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி((VSV, USP rcds, MSc (DS), psc, FCMI) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக இன்றைய தினம் (07) தினம் நியமித்தார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தில் அவர் ஆற்றிய தாராள பங்களிப்பு காரணமாக 2001 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.53 வருட கால கடற்படை வரலாற்றில் மிகவும் அனுபவம் வாய்ந்த கடற்படை தளபதியாக இவர் வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More