Home இலங்கை மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்-  4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் 

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்-  4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் 

by admin
 
 
 
 
 
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான  சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4  சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
 
குறித்த வழக்கு   புதன்கிழமை (21)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது  மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும்  மன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிவான் உத்தரவிட்டார்.
 
 கடந்த செவ்வாய்க்கிழமை  (20) சாய்ந்தமருது  காவல் நிலையத்திற்கு சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது  காவல்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப  காவல்துறை பரிசோதகர் ரவூப் தலைமையில்  கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்ட   30 26 22 23 வயது மதிக்கத்தக்க  4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில்    முன்னிலைப்படுத்தப்பட் போது எதிர்வரும் பெப்ரவரி 29 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
 
மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட  குறித்த வழக்கில்   பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி  உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான்  அழிக்கப்பட்ட  காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள  மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்ததுடன்  நீண்ட சமரப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை    எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்  உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More