காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடியதாக கைது செய்யப்பட்ட 30 பேரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் போது, அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் மீண்டும் முன்னிலையபகுமாறு உத்தரவிட்டார்.
காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய குற்றச்சாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுத்துள்ள சஹ்ரான் காசிமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினா் நேற்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் கைது செய்திருந்தனர்.
இதன்போது மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்று காவல்துறையினா் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனா்.
இந்தநிலையிரேயே கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய இவ்வாறு அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.