பிப்ரவரி 2022 முதல் இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா வசதி நீடிக்கப்பட மாட்டாது எனவும், புதிய வீசாக்களுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் குடிவரவு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2022 பெப்ரவரி மாதத்திலிருந்து 300 முதல் 400 ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் இலங்கையில் தங்கியுள்ளனர். இலங்கையில் 30 நாட்கள் தங்குவதற்கு வீசா கட்டணம் அண்ணளவாக $50 ஆகும்.
கடந்த வாரம், குடிவரவுத் திணைக்களம் சுற்றுலா அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டு, இலங்கையில் வசிக்கும் நீண்டகால உக்ரேனிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மார்ச் 7 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு அறிவிக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.