Home இலங்கை வித்தியா படுகொலை – மரண தண்டனைக் கைதி மரணம்!

வித்தியா படுகொலை – மரண தண்டனைக் கைதி மரணம்!

by admin

யாழ்ப்பாணம், புங்குடுதீவை சேர்ந்த வித்யா   கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மரணமாகியுள்ளார்.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய புபாலசிங்கம் தவகுமார் செந்தில் என்பவரே, உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்று கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

மேலும் குறித்த நபரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More