Home இலங்கைதேங்காய் உடைத்த திரும்பிய முதியவர் உயிரிழப்பு!

தேங்காய் உடைத்த திரும்பிய முதியவர் உயிரிழப்பு!

by admin

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று வழிபட்ட பின்னர் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More