Home இலங்கையாழில். நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு!

யாழில். நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 45 வயதுடைய  செபமாலை செல்வராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இரவு தூங்கியவர் மறுநாள் காலை 07 மணியாகியும் தூக்கத்தால் எழும்பாததால் , வீட்டார் அவரை தொட்டு எழுப்ப முயன்ற போது , அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (04.04.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More