Home இலங்கைபுத்தாண்டு அன்று யாழில் விபத்து – இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயம்!

புத்தாண்டு அன்று யாழில் விபத்து – இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயம்!

by admin

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

புதுவருட தினமான நேற்றைய தினம் இரவு (14.04.24) , சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த தாத்தா, மகிழங்கேணிப் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளையில், பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் சாவகச்சேரிப் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More