187
பளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பல மனித எலும்புக்கூடுகளையும் சீருடையையும் இன்று கண்டெடுத்துள்ளனர்.
இது தொடா்பில் அவர்கள் பளை காவல்துறையில் முறைப்பாடு செய்ததனையடுத்து காவல்துறையினா் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி நீதவான் நாளை திங்கட்கிழமை (29) குறித்த இடத்தில் மேலதிக அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Spread the love