யாழ்ப்பாணம் அராலி பகுதியில் பசுவதைத் தடைச் சட்டம் கோரி சைவ அமைப்புக்களின் பங்கேற்புடன் பசு மாடுகளை வீதிக்கு கொண்டுவந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அராலி தெற்கு அருள்மிகு கருப்பட்டிப் பிள்ளையார் கோயிலடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசே உடனடியாக பசுவதைச் சட்டத்தை அமுல்படுத்து, மாட்டிறைச்சி கடையை ஒழிக்கும் கட்சி மற்றும் வேட்பாளருக்கே எமது வாக்கு, காவற்துறையினரே மாட்டுக் கள்ளன் உங்களிடம் மாட்டுவது இல்லையா,வெட்டாதே வெட்டாதே கன்றுடன் பசுவை வெட்டாதே, இலங்கை சிவபூமி பசுக்கள் எமது தெய்வங்கள்,கன்றுத்தாச்சி பசுக்களை கொல்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.
சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிறுவ்ர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
ஏழை மக்களின் பசு மாடுகளையும் கன்றுத்தாச்சி மாடுகளையும் களவெடுப்போரைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.