219
யாழில் சகலைமாருக்கு இடையிலான வாய்த்தர்க்கத்தை அடுத்து, வீடு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து , வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் ஒருவரும் அவரின் மூன்று மகள்களும் , மகள்களின் கணவன்மாரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
அந்நிலையில் முதலாவது மகளின் கணவரும், மூன்றாவது மகளின் கணவரும் நேற்றைய தினம் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மூன்றாவது மகளின் கணவர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.
அவர் வெளியேறி சென்ற சில மணி நேரத்தில் 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து முதலாவது மகளின் கணவரை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க சென்ற , தாயார் மற்றும் மகள்மார் மூவர் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் தாய் மற்றும் அவரது மூத்த மகளின் கணவர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love