226
மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பில் அறிவோர் ஒன்று கூடும் அரசியற் கருத்துக்களம் யாழில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதன் போது உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இவ் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதில் முதலாவது ஈகைச் சுடரை இமானுவேல் அடிகளார்
ஏற்றியதைத் தொடர்ந்து மதகுருமார்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏற்றி வெத்தனர்.
இவ் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கல்விமான்கள், புத்திஜீவிகள் பொது மக்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love