327
யாழ்ப்பாணத்தில் வாகனம் ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர், தனது வாகனத்தினை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வேளை நேற்றைய தினம் சனிக்கிழமை (27.07.24) நள்ளிரவு வேளை வாகனத்திற்கு தீ வைத்து விட்டு, வன்முறை கும்பல் தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love