197
தமிழரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்க தீர்மானித்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கிறேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் நேற்றைய தினம் மாவை சேனாதிசாராவை சந்தித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு மாவை சேனாதிராசா கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தெரிவின் போது எம்மால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வேட்பாளர்களை நியமித்துள்ளனர். அதனை நான் ஏற்கவில்லை. அதனால் இம்முறை தேர்தலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனாலும் நான் தமிழரசு கட்சியில் இருந்து விலகவில்லை. தமிழரசு கட்சியில் வேட்பாளர் பட்டியலில் நிராகரிக்கப்பட்டவர்கள் வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.
நாங்கள் ஒன்று பட்டு இனவிடுதலைக்காக போராட வேண்டியவர்கள். இவ்வாறு பிளவுபட்டு நிற்பது துயரமே. எனவே இந்த தேர்தலின் பின்னாவது மனஸ்தாபங்களை விட்டு அனைவரும் இனவிடுதலைக்காக ஒன்று பட வேண்டும் என தெரிவித்தார்
Spread the love