முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. சர்வதேச காவல்துறை தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis இலக்கத்தினை சோதனை செய்தபோது, இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனமானது திருடப்பட்ட இலக்கத் தகடு மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவு அமைப்பைச் சோதித்ததில் அது சட்டப்பூர்வமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், குறித்த கார் இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட போதிலும், தனது கட்சிக்காரருக்கு இதில் தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. என்பதனால் பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது எனவும் னவே, எந்தவொரு நிபந்தனையின் கீழும் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு ம் குறிப்பிட்டுள்ளாா்.
கொழும்பில் உள்ள சொகுசு விடுதி ஒன்றின் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW காரொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி சோதனையிடப்பட்டு து தொடா்பில் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது அது முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்க உரித்தானது என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டா