Home இலங்கைஇலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியா்கள்

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியா்கள்

by admin
 ல்

இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த  22    இஸ்ரேலிய பிரஜைகள் இன்று   வியாழக்கிழமை (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக  புறப்பட்டுள்ளனர். இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள அறுகம்பை பகுதியில் வைத்து இஸ்ரேலியர்கள் மீது  பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதனால்  இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் அறிவித்ததையடுத்து குறித்த இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து  செல்லப்பட்டு அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு ஒரு நிலையான கால அட்டவணைக்கமைய விமானங்கள் இல்லாததால், அவர்கள் துபாய்க்கு சென்று அங்கிருந்து இஸ்ரேல் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More