105
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்.தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது,
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love