402
இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், இனவாதம் குறித்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் விவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு சென்ற சபாநாயகா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளாா்..
Spread the love