150
யாழில். மாட்டினை மேய்ச்சலுக்கு கட்ட சென்ற முதியவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். நெல்லியடி பகுதியை சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிக்கொம் உத்தியோகஸ்தரான இளையதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாட்டினை மேய்ச்சலுக்கு கட்ட சென்ற வேளை பாம்பு தீண்டியுள்ளது.
அதனை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்
Spread the love