நடிகர் அல்லு அர்ஜுனை இன்று காவல்துறையினா் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். ‛புஷ்பா 2’ திரைப்படத்தை அல்லு அர்ஜுன் பார்க்க சென்றபோது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி பெண் ஒருவா் இறந்த வழக்கு தொடா்பில் அவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். இவர் மீது பதியப்பட்ட வழக்கிற்கு பிணை கிடைக்காது என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். , அல்லு அர்ஜுன் தொடா்பான வழக்கு இன்று தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. . நீதிமன்றம் அல்லு அர்ஜுனின் பிணை மனுவை ரத்து செய்தால், அவர் சிறைக்குச் செல்வது உறுதியாகி அவா் சஞ்சல்குடா சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் எனத் தொிவிக்கப்படுகின்றது.
இதனால் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து சஞ்சல்குடா சிறை வரை பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அல்லு அர்ஜுன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் என கூறப்படுகின்றது.