63



யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி யாழ் நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அமைதியாக போராட முடியும் என கூறி, போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிய மன்று தடைகோரிய மனுவை நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.




Spread the love