89




யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார். அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Spread the love