Home இலங்கைமன்னார் புகையிரத நிலைய பிரதான வீதியை சீரற்ற முறையில் சீர் செய்யும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை

மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதியை சீரற்ற முறையில் சீர் செய்யும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை

by admin
மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளதார் புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில்   பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்ற சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
முன்னதாக  குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பி சென்றது.
இந்த நிலையில் புகையிரத பயணங்களுக்குக்காக செல்லும் பொதுமக்கள் உட்பட சாந்திபுரம்,சௌத்பார்   உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில்   வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற் கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக வீதிகளில் பள்ளங்களை நிரப்பும் பணிகள் கூட ஏனோ தானோ என இடம்பெறுவதாகவும் அவையும் குறுகிய காலப்பகுதியில் சேதமடைவதாகவும் சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறான நிலையில் பயன்படுத்த முடியாத வீதியை சீராக்கல் என்ற பெயரில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அரச பணத்தை வீணாக்குவரை விடுத்து வீதியை முழுமையாக புனரமைத்து தருமாறு அப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More