போலியான கனடா விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குச் செல்ல முயன்ற ஒரு தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள் எனவும் கணவனுக்கு 40 வயது எனவும் மனைவிக்கு 34 வயது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நரிட்டாவிற்கு நேற்று திங்கட்கிழமை (17) இரவு 8.35 மணிக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-454 என்ற விமானத்தில் ல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனா்.
இதன்போது, அவர்கள் விமான அனுமதிக்காக சமர்ப்பித்த ஆவணங்களில் போலியான கனடா விசாக்கள் இருந்ததாக சந்தேகித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைக்க நிலையில் அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.