141
சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ஏற்பட்ட தீ ,வேகமாக பரவி வருவதாகவும், தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லதண்ணிய, வால மலை தோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட தீப்பரவல் அங்கு நிலவும் மிக வறண்ட காலநிலையினால் மலை உச்சிகளில் வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வனப்பகுதிக்கு விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள நல்லதண்ணிய காவல்துறையினா் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love