2019 உயிா்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள மூளையைத் தனக்குத் தெரியும் என்றும், இந்தத் தகவலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தொிவித்துள்ளாா்.
நேற்று (06/03/2025) காலை கண்டியில் மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த ஞானசார தேரர், விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடப் போவதில்லை, ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.
“நான் பொறுப்புடன் இதைச் சொல்கிறேன். உயிா்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள மூளையை எனக்குத் தெரியும். ஆனால் இதை நான் ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மாட்டேன். ஜனாதிபதிக்கும் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களுக்கும் தெரிவித்த பிறகு நான் வெளியிடுவேன்” என்று அவர் கூறினார்.