தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி இன்று அதிகாலை உயிாிழந்துள்ளாா். இரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி இன்று உயிாிழந்துள்ளாா்.
சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து தனது புற்றுநோய் தொடா்பில் ஆவணப்படுத்தி வந்த ஹுசைனி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கும் முடிவை அறிவித்திருந்தாா்
1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவா் பின்னர் ரஜினிகாந்தின் வேலைக்காரன், பிளட்ஸ்டோன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். அத்துடன் விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே பயிற்சியாளராக நடித்தார்.
மேலும் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகியவை அவா் இறுதியாக நடித்த சில திரைப்பட்களாகும்.
படங்களில் நடிப்பதைத் தவிர, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் தோன்றிய ஹுசைனி, போர் விளையாட்டு, சிற்பம், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய பன்முகத் திறமை கொண்டவராக விளங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது