Home இலங்கைமாணவி உயிா்மாய்ப்பு – ஆசிரியருக்கு  கட்டாய விடுமுறை

மாணவி உயிா்மாய்ப்பு – ஆசிரியருக்கு  கட்டாய விடுமுறை

by admin

 

கொட்டாஞ்சேனயில்   வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடா்புடையவா்  என கருதப்படும்    ஆசிரியர்   கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (09) மாலை  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு    இச்சம்பவம் தொடர்பான  காவல்துறை ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது  பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காகவும்  அமைச்சினால் உள்ளக விசாரணை   ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More