Home இலங்கைஅரநாயக்க அம்பலாங்கந்தையில் மண்சரிவு –   120 பேரை காணவில்லை

அரநாயக்க அம்பலாங்கந்தையில் மண்சரிவு –   120 பேரை காணவில்லை

அலவத்துகொடை வீதி மண்சாிவினாலும் பலரைக் காணவில்லை

by admin

 

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால்  20 குழந்தைகள் உள்ளடங்கலாக 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அங்கும்புர – அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியிலும்  மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.  இந்த மண்சரிவில் மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள போதிலும், அது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என  தொிவித்துள்ள காவல்துறையினா்   தற்போது பலர் காணாமல் போயுள்ளதாகவும்  தொிவிக்கின்றனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More