143
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி, நீதி கேட்டுப் போராடி வந்த மற்றுமொரு தந்தை இன்று உயிரிழந்துள்ளார்.
சின்னத்தம்பனை, நேரியகுளம், வவுனியாவைச் சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் என்பவரே மரணமாகினார்.
இவரது மகனான ஜெயகாந்தன், கடந்த 2008ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
கடந்த 16 வருடங்களாக தனது மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடி சந்திரன் அவர்கள் ஓயாது போராடி வந்தார்.
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர் போராட்டங்களில் ஆரம்பம் முதலே தீவிரமாகப் பங்கேற்று வந்த இவர், இறுதிவரை தனது மகனைக் காணாமலேயே சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
மகன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு போராட்டக் களங்களில் நின்ற மற்றுமொரு உறவின் உயிர் பிரிந்தது அநீதியின் வலியை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
Spread the love

