219
மன்னார் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது. குறித்த படகிலிருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெரிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. படகில் இருந்த இரு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தற்போது கரைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை கடற்படையினர் இன்று அதிரடியாக சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மீட்கப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் அதன் பெறுமதி குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
________________________________________
Spread the love

