220
சவுதி அரேபியா, தனது King Fahd Air Base விமான தளத்தை அமெரிக்க படைகள் பயன்படுத்த அனுமதித்துள்ளதாக தகவல். இதற்கு முன், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தனது நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காது என கூறியிருந்தது. இந்த முடிவு, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணிக்கு சவுதி ஆதரவு அதிகரித்து வருவதை காட்டும் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
UAE, ஈரானுடன் தொடர்புடைய அமைப்புகள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. ஈரான் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் கிளப்புகள் மூடப்பட்டதாக தகவல். சவுதி மற்றும் UAE இரண்டும், தங்களது வான்வழி பாதுகாப்பின் மூலம் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்கத் தொடங்கியுள்ளன. இது அவர்களை நேரடி போரில் இல்லாவிட்டாலும், பாதுகாப்பு பங்காளிகளாக மாற்றியுள்ளது. “எங்களது பொறுமைக்கு எல்லை உண்டு” என சவுதி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் “போரில் இணைவதற்கான முன்னேற்றம்” என்பது அமெரிக்க படைகள் சவுதி தளங்களை பயன்படுத்த அனுமதி UAE-யின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வான்வழி தாக்குதல்களை தடுக்குதல் எனவும் இவை அனைத்தும் நேரடி போர் அறிவிப்பு அல்ல எனவும் கூறப்படுகிறது. ஆனால், இது முந்தைய நடுநிலைக் கொள்கையிலிருந்து ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
இராணுவ ரீதியாக: அமெரிக்கா சவுதி நிலப்பரப்பிலிருந்து செயல்படுவதால், போரின் பரப்பளவு விரிவடையும். பிராந்திய ரீதியாக:
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் சூழலில், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சவுதி & UAE, மீண்டும் அமெரிக்க பாதுகாப்பு வலயத்திற்கு நெருக்கமாகி வருகின்றன. எனினும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஈரான், இந்நாடுகளை நேரடி பங்கேற்பாளர்களாகக் கருத ஆரம்பித்தால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். Hormuz நீரிணை போன்ற முக்கிய கடல் பாதைகளில் பாதிப்பு ஏற்படலாம்.
இப்போதைக்கு, சவுதி மற்றும் UAE நேரடியாக போரில் ஈடுபடவில்லை.
ஆனால், அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள்அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணிக்கு ஆதரவாக நகரும் ஒரு தெளிவான சிக்னலாக பார்க்கப்படுகிறது. இதனால், மத்திய கிழக்கில் பெரிய அளவிலான மோதலுக்கான அபாயம் அதிகரித்துள்ளது.
________________________________________
Spread the love

