அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கடந்த சில நாட்களாக முன்னெடுத்து வந்த அடையாளப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இன்று (2026 ஏப்ரல் 06) சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதியும் சித்திரைப் புத்தாண்டு நெருங்குவதைக் கருத்திற்கொண்டும், நீண்ட தூரங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் சிரமங்களைக் குறைக்கவும் இந்தப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கடமைகளுக்குத் திரும்ப வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன் மூலம் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் முடங்கியிருந்த வெளிநோயாளிப் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. இருந்தபோதிலும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை மீண்டும் தொடரப்போவதாக வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

