Home இலங்கையாழ் – வைமன் வீதி வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

யாழ் – வைமன் வீதி வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் அந்த வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்தன. மோட்டார் சைக்கிள் இரண்டு அடித்துச் சேதமாக்கப்பட்டன. 8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கராஜ் உரிமையாளர் நேற்று இரவு முச்சக்கர வண்டிகள் இரண்டை வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார். இன்று அதிகாலை 2.00 மணியளவில், பெரும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் வெளியே வந்த வீட்டு பார்த்த போது 8 பேர் முகமூடியுடன் வீட்டின் முன்னாள் நின்றுள்ளனர்.”அந்தக் கும்பல் வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டது.

அதனால் முச்சக்கரவண்டிகள் இரண்டும் தீ பற்றி எரிந்தன. மோட்டார் சைக்கிள்கள் இரண்டு வாளால் வெட்டப்பட்டு சேதமாக்கப்பட்டன. வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நான் எவருடன் எந்த பிரச்சினைளுக்கும் செல்வதில்லை. யார் இவ்வாறான சம்பவத்தை புரிந்ததென்றும் தெரியாது” என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவற்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More