Home இலங்கைவட்டவளையில் வான் விபத்து – 9 பேர் காயம்

வட்டவளையில் வான் விபத்து – 9 பேர் காயம்

by admin


வட்டவளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் காலி பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிமை (18.04.2018 ) விடியற்காலை 5.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வானில் 9 பேர் பயணித்துள்ளதாகவும், 9 பேரும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, ஐவர் தொடர்ந்தும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காலி பிரதேசத்தில் மரண வீடொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் அட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More