Home உலகம்பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்

பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்

by admin


பிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள   மோல்களில்  60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சிறைச்சாலையில் போதை பொருள் விற்பனையாளர்கள்  கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இன்று திடீரென சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.


எனினும் ; இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டதில் சுமார் 60 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும்  பலர்; காயம் அடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More