Home இந்தியாமு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார்

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார்

by admin


திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், இன்றையதினம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது   தமிழகம் முழுவதும் கடும் வறட்சிக் காணப்பவதனால்  தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் எனவும்  தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த  விவசாயிகளின் குடும்பத்தற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More