ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி , துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் ஆகியோரும் 6 பேரும் கொல்லப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளதுள்ள நிலையில் அமெரிக்காவை பழி தீர்ப்போம் என ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில் பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக ஈரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் தங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டுமொரு வளைகுடா யுத்தம் ஏற்படுமா என்ற அச்சம் தோன்றியுள்ளது #வளைகுடாயுத்தம் #அச்சம் #ஈரான் #தாக்குதல் #டிரம்ப் #எச்சரிக்கை