குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மொரக்கோ ஆபிரிக்க ஒன்றியத்தில் மீளவும் இணைந்து கொண்டுள்ளது. 33 ஆண்டுகளுக்கு முன்னதாக மொரக்கோ ஆபிரிக்க ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தது.
மேற்கு சஹாரா ஆபிரிக்க ஒன்றியத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டே மொரக்கோ ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தது.
ஆபிரிக்க ஒன்றியத்தில் சுமார் 55 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மொரக்கோ 110 பில்லியன் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபிரிக்காவின் ஐந்தாம் மிகப் பெரிய பொருளாதாரமாக மொரக்கோ காணப்படுகின்றது. ஆபிரிக்க ஒன்றியத்தில் மொரக்கோ இணைந்து கொண்டமை பிராந்திய வலய நாடுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.