Home இலங்கைபடகு சவாரி சென்ற இளைஞன் படகின் விசிறி வெட்டி உயிரிழப்பு!

படகு சவாரி சென்ற இளைஞன் படகின் விசிறி வெட்டி உயிரிழப்பு!

by admin

நண்பர்களுடன் கடலில் படகு சவாரி செய்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 24 வயதுடைய கெனடி பிரின்ஸரன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி சென்றுள்ளார். அதன் போது படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்துள்ளார். அதன் போது படகின் இயந்திரத்தின் விசிறி வெட்டியுள்ளது.அத்துடன் குறித்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

சுழியோடிகள் துணையுடன் சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞன் மருதங்கேணி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More